செல்போன் பயன்படுத்தியதை கண்டித்ததால்கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


செல்போன் பயன்படுத்தியதை கண்டித்ததால்கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 28 Dec 2022 12:15 AM IST (Updated: 28 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

செல்போன் பயன்படுத்தியதை கண்டித்ததால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தேனி

தேனி மாவட்டம் அன்னஞ்சி மூனுசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகள் கோபிகா (வயது 18). இவர், ஆண்டிப்பட்டி ரங்கநாதபுரத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கணினி அறிவியல் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர், தினந்தோறும் கல்லூரி முடிந்து வந்த பிறகு அடிக்கடி செல்போனை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனை அவரது தாய் கண்டித்ததுடன், செல்போனை பிடுங்கி உடைத்ததாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த கோபிகா நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த அல்லிநகரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கோபிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Related Tags :
Next Story