ஈரோடு-சத்தி 4 வழிச்சாலை அமைக்கும் பணிக்காக4 அரச மரங்கள் வேருடன் பிடுங்கப்பட்டு வேறு இடத்தில் நடப்பட்டன


ஈரோடு-சத்தி 4 வழிச்சாலை அமைக்கும் பணிக்காக4 அரச மரங்கள் வேருடன் பிடுங்கப்பட்டு  வேறு இடத்தில் நடப்பட்டன
x

ஈரோடு-சத்தி 4 வழிச்சாலை அமைக்கும் பணிக்காக 4 அரச மரங்கள் வேருடன் பிடுங்கப்பட்டு வேறு இடத்தில் நடப்பட்டன,

ஈரோடு

கவுந்தப்பாடி

ஈரோடு-சத்தி 4 வழிச்சாலை அமைக்கும் பணிக்காக 4 அரச மரங்கள் வேருடன் பிடுங்கப்பட்டு வேறு இடத்தில் நடப்பட்டன,

சாலை அகலப்படுத்தும் பணி

ஈரோடு முதல் சத்தியமங்கலம் வரையிலான சாலை 4 வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. அதில் முதல்கட்டமாக சாலைகள் அளவீடு செய்யும் பணி முடிந்து சாலை ஓரங்களில் இருந்த புளிய மரங்கள், வேப்பமரங்கள், பனைமரங்கள் உள்பட பலவகையான மரங்களும் வெட்டி அகற்றப்பட்டன. இதில் ஓரிரு சிறிய மரங்கள் முதல் 50, 100 ஆண்டுகளான பெரிய மரங்கள் வரை வெட்டி அகற்றப்பட்டன. இந்தநிலையில் மரங்களை வெட்டி அகற்ற ஏலம் எடுத்தவர்கள் சாலை ஓரங்களில் இருந்த அரச மரங்களை மட்டும் வெட்டி அகற்றாமல் விட்டு சென்றனர்.

மரங்கள் வெட்டப்பட்டன

இதனால் 4 வழிச்சாலை விரிவாக்க பணியினை மேற்கொண்டுவரும் தனியார் நிறுவனம் வனத்துறை அனுமதியுடன் கவுந்தப்பாடி, கிருஷ்ணாபுரம் பகுதியில் வெட்டப்படாமல் இருந்த 4 பெரிய அரச மரங்களை வேருடன் பிடுங்கி அவற்றை வேறு இடங்களில் நடுவதற்கு முடிவு செய்தது. இதையடுத்து முதல் நடவடிக்கையாக அரச மரங்களின் கிளைகள் மட்டும் வெட்டி அகற்றப்பட்டன. பின்னர் மரம் காய்ந்துவிடாமல் இருக்க அவற்றின் மீது ரசாயன கலவை பூசப்பட்டது.

தொடர்ந்து ராட்சத எந்திரங்கள் உதவியுடன் வெட்டப்படாமல் இருந்த 40, 50 ஆண்டுகள் பழமையான 4 அரச மரங்களும் வேருடன் பிடுங்கப்பட்டன. பின்னர் அவை பெரிய லாரிகளில் ஏற்றப்பட்டு ஈரோட்டுக்கு கொண்டு வரப்பட்டன. அதன்பின்னர் அங்கு தயாராக இருந்த வெட்டப்பட்ட பெரிய குழிகளில் எந்திரங்கள் மூலம் 4 மரங்களும் நடப்பட்டன.


Next Story