விவசாயிகளுக்கு50 சதவீத மானியத்தில் பண்ணை கருவிகள்


விவசாயிகளுக்கு50 சதவீத மானியத்தில் பண்ணை கருவிகள்
x
தினத்தந்தி 4 Jan 2023 12:15 AM IST (Updated: 4 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் பண்ணை கருவிகள் வழங்கப்படும் என்று தேனி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவித்தார்.

தேனி

தேனி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராமசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், தேனி ஒன்றியத்தில் இத்திட்டம் அரண்மனைப்புதூர், கொடுவிலார்பட்டி, தப்புக்குண்டு, தாடிச்சேரி, பூமலைக்குண்டு, அம்பாசமுத்திரம், குப்பிநாயக்கன்பட்டி ஆகிய கிராமங்களில் செயல்படுத்தப்படுகிறது. இந்த கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு இத்திட்டத்தின் கீழ் 50 சதவீத மானியத்தில் பண்ணைக்கருவிகள் வழங்கப்படுகிறது. அதன்படி மண்வெட்டி, கடப்பாரை, களைக்கொத்தி, சீனாத்தட்டு தலா 1, அரிவாள் 2 வழங்கப்படுகிறது. இதன் மதிப்பு ரூ.3 ஆயிரம். 50 சதவீத மானியத்தில் இவை ரூ.1,500-க்கு வழங்கப்படுகிறது. தேவைப்படும் விவசாயிகள் தங்களின் ஆதார் எண், ரேஷன் கார்டு நகல், வங்கிக் கணக்கு புத்தக நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை தங்கள் பகுதியை சேர்ந்த உதவி வேளாண்மை அலுவலரிடம் சமர்ப்பித்து பெற்றுக் கொள்ளலாம். மேலும், ஜிங்க் சல்பேட் உரம் 10 கிலோ சிப்பம் விலை ரூ.660. அதற்கு ரூ.250 மானியம் வழங்கப்படுகிறது. இதனை விவசாயிகள் பயன்படுத்திக் கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story