ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடங்களுக்கு 2-ம் பருவ பாட புத்தகங்கள்- நோட்டுகள் அனுப்பி வைப்பு
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடங்களுக்கு 2-ம் பருவ பாட புத்தகங்கள் -நோட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டன.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடங்களுக்கு 2-ம் பருவ பாட புத்தகங்கள் -நோட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டன.
2-ம் பருவ பாடப்புத்தகம்
காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து தற்போது பெரும்பாலான பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டு உள்ளன. இன்னும் ஒரு சில பள்ளிக்கூடங்கள் நாளை (திங்கட்கிழமை) திறக்கப்பட உள்ளன. இதையொட்டி மாணவ -மாணவிகளுக்கு 2-ம் பருவ பாடப்புத்தகங்கள் வழங்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கொல்லம்பாளையம் ரெயில்வே காலனி மேல்நிலை பள்ளிக்கூடத்தில் இருந்து 6, 7-ம் வகுப்புக்கான 2-ம் பருவ பாடப்புத்தகங்களும், 6 முதல் 9-ம் வகுப்புகளுக்கான நோட்டுகளும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.
55 பள்ளிக்கூடங்கள்
இது குறித்து தமிழ்நாடு பாடநூல் கழக ஆர்வலர்கள் கூறியதாவது:-
காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பெரும்பாலான பள்ளிக்கூடங்கள் நேற்று முன்தினம் முதல் திறக்கப்பட்டு 2-ம் பருவ தேர்வுக்கான பாடங்கள் தொடங்கியுள்ளன. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்கள் சுயநிதி பள்ளிக்கூடங்கள் என 55 பள்ளிக்கூடங்களுக்கு தேவையான 6, 7-ம் வகுப்புக்கான பாட புத்தகங்கள் ஈரோடு ரெயில்வே காலனி பள்ளிக்கூடத்துக்கு கொண்டு வந்து இறக்கி வைக்கப்பட்டன.
பின்னர் அந்தந்த பள்ளிக்கூடங்களுக்கு தேவையான அனைத்து பாடப்புத்தகங்களும் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. இது தவிர 6, 7, 8, 9-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு தேவையான 80 பக்க நோட்டுகளும் அனுப்பி வைக்கப்படுகிறது. இவைகள் அனைத்தும் மாணவ -மாணவிகளுக்கு இலவசமாக வழங்கப்படும். இதேபோல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவ -மாணவிகளுக்கு தேவையான பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்கள் அனுப்பப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.