கிடாரி கன்றுகளுக்கு கன்றுவீச்சு தடுப்பூசி முகாம்


கிடாரி கன்றுகளுக்கு கன்றுவீச்சு தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 7 Feb 2023 12:15 AM IST (Updated: 7 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆண்டிபட்டியில் கிடாரி கன்றுகளுக்கு கன்றுவீச்சு தடுப்பூசி முகாம் நடந்தது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி அருகே ஆண்டிபட்டி கிராமத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில், தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் கிடாரி கன்றுகளுக்கு, கன்று வீச்சு நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமை மாவட்ட மண்டல இணை இயக்குனர் சஞ்சீவிராஜ் தொடங்கி வைத்தார். முகாமில் 4 முதல் 8 மாத்திற்கு உட்பட்ட 20 கிடாரி கன்றுகளுக்கு கன்று வீச்சு நோய் தடுப்பூசி போடப்பட்டது.

மேலும் தீவிர இருவாரக் கோழிக் கழிச்சல் தடுப்பூசி முகாமில் 198 கோழிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. முகாமில் உதவி இயக்குனர் விஜயஸ்ரீ, இளையரசனேந்தல் கால்நடை உதவி மருத்துவர் பிரவீன், கால்நடை ஆய்வாளர் பொண்ணு லட்சுமி, கால்நடை பராமரிப்பு உதவியாளர் பாலமுருகன், ஊராட்சி மன்ற தலைவர் சண்முகலட்சுமி பேச்சிமுத்து மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.


Next Story