ராமர்கோவில் கும்பாபிஷேகத்திற்காக, செவ்வாய்க்கிழமை நெல்லை கோட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடு


ராமர்கோவில் கும்பாபிஷேகத்திற்காக, செவ்வாய்க்கிழமை  நெல்லை கோட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 6 Dec 2022 12:15 AM IST (Updated: 6 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ராமர்கோவில் கும்பாபிஷேகத்திற்காக, செவ்வாய்க்கிழமை நெல்லை கோட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுவதாக இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

உடன்குடி:

இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அயோத்தி ராமஜென்ம பூமியில் இந்து முன்னணியின் நீண்டநாள் கோரிக்கையான பிரம்மாண்ட கோவில் கட்டப்பட்டு வருகிறது. அங்கு விரைவில் நடைபெற உள்ள ராமர் கோவில் மகா கும்பாபிஷேக நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறவும், அங்குபணிபுரியும் பணியாளர்கள் மற்றும் டிரெஸ்ட் உறுப்பினர்கள் நலனுக்காகவும் இந்தமுன்னணி சார்பில் நெல்லை கோட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் இன்று(செவ்வாய்க்கிழமை) இந்து முன்னணி சார்பில் அர்ச்சனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதன்படி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவில், பாளையங்கோட்டை ராமர் கோவில், பாபநாசநாதர் கோவில், பாபநாசம் வள்ளியூர் முருகன் கோவில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், தூத்துக்குடி சிவன் கோவில், கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில், விளாத்திகுளம் மீனாட்சி அம்மன் கோவில், சுசீந்திரம் தாணுமாலையன் கோவில் நாகர்கோவில் நாகராஜா கோவில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், திருவட்டார் ஆதி கேசவ பெருமாள் கோவில், தென்காசி காசி விஸ்வநாதர் கோவில், சங்கரன்கோவில் சங்கரநாராயணன் கோவில் மற்றும் முக்கிய கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். எனவே, இந்த கோவில்களில் இன்று நடைபெறும் சிறப்பு பூஜைகளில் பொதுமக்கள், துறவிகள், ஆன்மிக பெரியோர்கள், இந்து முன்னணியினர் திரளாக கலந்து கொள்ள வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story