பெண் சப்-இன்ஸ்பெக்டருக்கு வரதட்சணை கொடுமை
காதல் திருமணம் செய்து கொண்ட தஞ்சை பெண் சப்-இன்ஸ்பெக்டருக்கு வரதட்சணை கொடுமை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர்
தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை கூட்டுறவு காலனியை சேர்ந்தவர் புகழ்வேந்தன். இவர், திருச்சியில் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சசிரேகா(வயது 33). இவர், தஞ்சை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். 8 ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள், கடந்த 2018-ம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 3 மற்றும் 2 வயதில் 2 குழந்தைகள் உள்ளனர்.
வரதட்சணை கொடுமை
இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் முதல் புகழ்வேந்தன், சசிரேகாவை வரதட்சணை கேட்டு கொடுமை செய்து வந்ததோடு, வீட்டில் இருந்து பணம் மற்றும் நகை வாங்கி வருமாறு அடிக்கடி தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும், சசிரேகாவை அடித்து துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து தஞ்சை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சசிரேகா புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிமதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து புகழ்வேந்தனை கைது செய்தனர்.
Related Tags :
Next Story