சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோருக்கு கடன் வழங்க சிறப்பு முகாம்


சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோருக்கு     கடன் வழங்க சிறப்பு முகாம்
x

தாலுகா அலுவலகங்களில் சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோருக்கு கடன் வழங்க சிறப்பு முகாம்கள் நடக்கின்றன.

ராமநாதபுரம்

தாலுகா அலுவலகங்களில் சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோருக்கு கடன் வழங்க சிறப்பு முகாம்கள் நடக்கின்றன.

சிறுபான்மையினர்

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் டாம்கோ மற்றும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் டாப்செட்கோ மூலம் தனி நபர் கடன் திட்டம், சுய உதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன் திட்டம் மற்றும் கல்விக்கடன் ஆகிய திட்டங்களின் கீழ் கடன் வழங்கும் சிறப்பு முகாம்கள் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களில் நடைபெறுகிறது.

இதில் சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் ஆகியோருக்கு கடன் வழங்கும் சிறப்பு முகாம் கீழ்கண்ட நாட்களில் நடைபெற உள்ளது.

அதன்படி நாளை(வியாழக்கிழமை)திருவாடானை, 9-ந்தேதி ஆர்.எஸ்.மங்கலம், 13-ந்தேதி கடலாடி, 14-ந்தேதி கமுதி, 16-ந்தேதி பரமக்குடி, 19-ந்தேதி கீழக்கரை, 20-ந்தேதி ராமேசுவரம், 22-ந்தேதி முதுகுளத்தூர் தாலுகா அலுவலகத்தில் டாம்கோ மற்றும் டாப்செட்கோ கடன் வழங்கும் சிறப்பு முகாம் நடக்கிறது.

ஆவணங்கள்

சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் இன மக்கள் கலந்து கொண்டு கடன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் சாதி, வருமானம், இருப்பிடம், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், கடன் பெறும் தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை ஆகிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.மேலும் விவரங்களுக்கு ராமநாதபுரம் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நல அலுவலகம், ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கிகளை தொடர்பு கொண்டு விவரங்கள் பெற்றுக்கொள்ளலாம்.

இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.


Related Tags :
Next Story