மோட்டார்சைக்கிள் விற்பனை நிலையத்துக்கு ரூ. 75 ஆயிரம் அபராதம்


மோட்டார்சைக்கிள் விற்பனை நிலையத்துக்கு ரூ. 75 ஆயிரம் அபராதம்
x
தினத்தந்தி 3 Feb 2023 12:15 AM IST (Updated: 3 Feb 2023 11:30 AM IST)
t-max-icont-min-icon

மோட்டார்சைக்கிள் விற்பனை நிலையத்துக்கு ரூ. 75 ஆயிரம் அபராதம்

நாகப்பட்டினம்

நாகை மாவட்டம் சீர்காழி அருகே எருமல் கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 37). இவர் மயிலாடுதுறை- திருவாரூர் சாலையில் இயங்கி வரும் தனியார் மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையத்தில் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28-ந்தேதி ரூ.1 லட்சத்து 22 ஆயிரம் மதிப்புள்ள மோட்டார் சைக்கிளை வாங்கினார். அப்போது ராஜசேகரிடம், ஷோரூம் நிர்வாகம் மோட்டார் சைக்கிளுடன் இலவசமாக ஹெல்மெட்டும் தருவதாக தெரிவித்துள்ளது. ஆனால் மோட்டார் சைக்கிள் வாங்கி நீண்ட நாட்கள் ஆகியும் இலவச ஹெல்மெட்டை ஷோரூம் நிர்வாகம் வழங்கவில்லை.

இதுகுறித்து ராஜசேகர் நாகை மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி தட்சிணாமூர்த்தி, பாதிக்கப்பட்ட ராஜசேகருக்கு புதிய ஹெல்மெட் வழங்க வேண்டும். சேவைக்குறைபாடு மற்றும் மனுதாரருக்கு ஏற்படுத்திய மன உளைச்சல் ஆகியவற்றுக்கு ரூ.50 ஆயிரமும், வழக்கு செலவு தொகையாக ரூ.25 ஆயிரமும் சேர்த்து ரூ.75 ஆயிரம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.


Next Story