பென்னிகுயிக் பிறந்தநாளையொட்டிகூடலூரில் மாரத்தான் போட்டி
முல்லைப்பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுயிக்கின் 182-வது பிறந்தநாளையொட்டி, நேற்று கூடலூரில் மாரத்தான் போட்டி நடந்தது.
தேனி
முல்லைப்பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுயிக்கின் 182-வது பிறந்தநாளையொட்டி, நேற்று கூடலூரில் மாரத்தான் போட்டி நடந்தது. போட்டிக்கு கூடலூர் வடக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பிச்சை பாண்டியன் முன்னிலை வகித்தார், உத்தமபாளையம் கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு மதுக்குமாரி மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்தார். மேலும் சைக்கிள் போட்டியும் நடந்தது. அதனை கூடலூர் நகராட்சி தலைவர் பத்மாவதி லோகந்துரை தொடங்கி வைத்தார். கூடலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் தொடங்கிய மாரத்தான் பென்னிகுயிக் மண்டபம் வரை சென்று திரும்பி கூடலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் முடிவடைந்தது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு ஓடினர். போட்டியில் முதல் 4 இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது. மேலும் 10 பேருக்கு ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story