புதுச்சேரி மாநில வளர்ச்சிக்காக நானும், ஆளுநரும் ஒற்றுமையாக செயல்பட்டு வருகிறோம்: முதல்மந்திரி ரெங்கசாமி பேட்டி


புதுச்சேரி மாநில வளர்ச்சிக்காக   நானும், ஆளுநரும் ஒற்றுமையாக செயல்பட்டு வருகிறோம்:   முதல்மந்திரி ரெங்கசாமி பேட்டி
x
தினத்தந்தி 23 Nov 2022 6:45 PM GMT (Updated: 2022-11-24T00:15:53+05:30)

புதுச்சேரி மாநில வளர்ச்சிக்காக நானும், ஆளுநரும் ஒற்றுமையாக செயல்பட்டு வருகிறோம் என்று முதல்மந்திரி ரெங்கசாமி தெரிவித்தார்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நேற்று மாலையில் புதுச்சேரி முதல்மந்திரி ரெங்கசாமி வந்தார். அவர் மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் வெளியே வந்த அவர் சில பக்தர்களுக்கு தேங்காய், பழம் பிரசாதம் வழங்கினார். மேலும் தெய்வானை யானைக்கு வாழை பழம் கொடுத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சியில் நானும், ஆளுநரும் ஒற்றுமையாக செயல்பட்டு வருகிறோம்' என்று சுருக்கமாகமுடித்து கொண்டார்.


Next Story