வாடகை பொருட்களுக்கு பணம் தராத வாலிபர் கைது
தேவதானப்பட்டி அருகே சிச்ச்ளுக்கு பணம் தராத வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தேனி
தேவதானப்பட்டி,
தேவதானப்பட்டி அருகே உள்ள மேல்மங்கலத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 43). இவர், மேல்மங்கலத்தில் கட்டுமான பொருட்களை வாடகைக்கு விடும் கடை வைத்துள்ளார். ஆண்டிப்பட்டி வெங்கடாசலபுரத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (35). கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சிவக்குமாரிடம், பிரகாஷ் தான் காண்டிராக்டர் என்று கூறி கட்டிட பொருட்களை வாடகைக்கு எடுத்தாா். ஆனால் அதற்கான வாடகை பணத்தை கொடுக்காமல் பிரகாஷ் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஜெயமங்கலம் போலீசில் சிவக்குமார் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து பிரகாசை கைது செய்தனர்.
Related Tags :
Next Story