ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டருக்கு 3 ஆண்டு சிறை


ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டருக்கு     3 ஆண்டு சிறை
x

ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டருக்கு லஞ்ச வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு உத்தரவிட்டது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டருக்கு லஞ்ச வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு உத்தரவிட்டது.

ரூ.4 ஆயிரம் லஞ்சம்

விருதுநகர் அருகே உள்ள ஆமத்தூர் போலீஸ் நிலையத்தில் கடந்த 2010-ம் ஆண்டு இன்ஸ்பெக்டராக இருந்தவர் உஸ்மான் அலி. இவர் விபத்து வழக்கு ஒன்றில் ஆர்.டி.ஓ.விடம் வாகனத்தை காட்டுவதற்கு சுபாஷ் என்பவரிடம் ரூ.4 ஆயிரம் லஞ்சம் கேட்டு உள்ளார். இதுகுறித்து சுபாஷ் விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் உஸ்மான் அலியை லஞ்சம் வாங்கியதற்காக விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

3 ஆண்டு சிறை

இதுகுறித்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை நேற்று தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஹாஜிரா ஆர். ஜிஜி விசாரித்து லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் உஸ்மான் அலிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பு வழங்கினார். இன்ஸ்பெக்டர் உஸ்மான் அலி தற்போது ஓய்வு பெற்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Related Tags :
Next Story