ஆசீர்வாதபுரம்,சாலைப்புதூர்பள்ளிகளுக்கு புகையிலை பொருள்கள் இல்லா பகுதி சான்றிதழ்


ஆசீர்வாதபுரம்,சாலைப்புதூர்பள்ளிகளுக்கு  புகையிலை பொருள்கள் இல்லா பகுதி சான்றிதழ்
x
தினத்தந்தி 29 Oct 2022 12:15 AM IST (Updated: 29 Oct 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

ஆசீர்வாதபுரம்,சாலைப்புதூர்பள்ளிகளுக்கு சுகாதாரத்துறை சார்பில் புகையிலை பொருள்கள் இல்லா பகுதி சான்றிதழ் வழங்கப்பட்டது.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

தமிழகத்தில் புகையிலை தடுக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளி, கல்லூரி அருகில் புகையிலை பொருள்கள் விற்பதை தடுக்க காவல்துறை மற்றும் சுகாதாரத்துறை மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி புகையிலை பொருள்கள் விற்கப்படாத பள்ளிகளுக்கு சுகாதாரத்துறை சார்பில் புகையில்லா பகுதி சான்று வழங்கப்பட்டு வருகிறது. இதையொட்டி சாலைபுதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் பேய்க்குளம் அடுத்த ஆசீர்வாதபுரம் டிஎன்டிடிஏ குருகால்பேரி மேல்நிலைப்பள்ளிக்கு புகையிலை இல்லா சான்று வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் மாணிக்கத்திடம் சுகாதார ஆய்வாளர்கள் ஜேசுராஜ், மகேஸ்குமார், சங்கரசுப்பிரமணியன் ஆகியோர் சான்றிதழை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து பள்ளி வளாகத்தில் புகையிலை தடை செய்யப்பட்ட பகுதி என பதாகைகள் வைக்கப்பட்டன. இதேபோல் சாலைபுதூர் ஏகரட்சகர் சபை மேல்நிலைப்பள்ளியிலும் பள்ளி தலைமை ஆசிரியர் பிரான்சிஸ் சேவியர் ராஜிடம் சுகாதாரத்துறையினர் புகையிலை இல்லா சான்றிதழை வழங்கினர்.


Next Story