இடைநிலை ஆசிரியர் பணிகளுக்குவிண்ணப்பிக்கலாம்


இடைநிலை ஆசிரியர் பணிகளுக்குவிண்ணப்பிக்கலாம்
x

ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்்டர் கூறியுள்ளாா்.

திருவாரூர்

ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்்டர் கூறியுள்ளாா். இது குறித்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காலிப்பணியிடங்கள்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் திருவாரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களுக்கான பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த பணியிடங்களை பள்ளி மேலாண்மைக்குழு மூலம் முற்றிலும் தொகுப்பூதிய முறையில் தற்காலிகமாகவும், நிபந்தனையின் அடிப்படையிலும் நிரப்பப்படஉள்ளது.

இடைநிலை ஆசிரியருக்கு தொகுப்பூதியம் மாதம் ரூ.7 ஆயிரத்து 500 ஆகும். வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதியுடன், ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று இல்லம் தேடி கல்வித்திட்டத்தில் தன்னார்வளராக இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

முன்னுரிமை

வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதிகளுடன், ஆசிரியர் தகுதித் தேர்விலும் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் பட்டியலினத்தவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் அந்தந்த பகுதிகளில் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

தற்போது நியமனம் செய்யப்படும் தற்காலிக ஆசிரியர்கள் முறையான நியமனங்கள் மூலம் பூர்த்தி செய்யும் வரை மட்டுமே பணியமர்த்தப்படுவார்கள்.

எனவே பணி தேவைப்படுவோர் ஆசிரியர் காலிப்பணியிடங்களை திருவாரூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் அலுவலகத்தினை தொடர்பு கொண்டு, அந்த பணியிடங்களுக்கு மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

15-ந் தேதி

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தனது எழுத்து மூலமான விண்ணப்பத்தினை கல்வித்தகுதிச் சான்று மற்றும் இதர ஆவணங்களுடன் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் வருகிற 15-ந் தேதி(புதன்கிழமை) மாலை 5.45 மணிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.


Next Story