தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பதற்காக மொபட்டில் கொண்டு சென்ற பெண் உள்பட 2 பேர் கைது
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பதற்காக மொபட்டில் கொண்டு சென்ற பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனா்.
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக மொபட்டில் கொண்டு சென்ற பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வாகன சோதனை
கோபி அருகே உள்ள மொடச்சூர் கலராமணி பகுதியில் கோபி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேலு மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மொபட்டில் சந்தேகப்படும் வகையில் 2 பேர் வந்தனர்.
உடனே அவர்கள் 2 பேரையும் தடுத்த நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர். சோதனையின்போது அவர்கள் 2 பேரிடம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்ததை கண்டனர். இதைத்தொடர்ந்து 2 பேரையும் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
கைது
விசாரணையில், 'அவர்கள் கோபியை சேர்ந்த அசோக்குமார் (வயது 40), முருகன்புதூரை சேர்ந்த ராஜாத்தி (41) என்பதும், அவர்கள் 2 பேரும் கடை கடையாக சென்று தின்பண்டங்கள் வினியோகம் செய்யும் வியாபாரம் செய்து வந்ததும், அந்த பொருட்களுடன் புகையிலை பொருட்களை விற்பனைக்காக கொண்டு சென்றதும்,' தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து ரூ.32 ஆயிரத்து 340 மதிப்பிலான புகையிலை பொருட்கள் மற்றும் ரூ.8 ஆயிரத்து 720-ஐ பறிமுதல் செய்தனர்.