மருத்துவ கல்லூரியில் சேர்ந்த மாணவிகளுக்கு பாராட்டு


மருத்துவ கல்லூரியில் சேர்ந்த மாணவிகளுக்கு பாராட்டு
x

அரசு பள்ளியில் பயின்று மருத்துவ கல்லூரியில் சேர்ந்த மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது

திருநெல்வேலி

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு எழுதியவர்களில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் கலந்தாய்வு மூலம் மருத்துவ கல்லூரிகளில் பயில இடம் கிடைத்தது. நெல்லை மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படித்த 11 மாணவிகளுக்கு அரசு மருத்துவ கல்லூரிகளில் மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ளது.

நெல்லை நகர்மன்ற அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி லாவண்யாவுக்கு கோவை அரசு மருத்துவ கல்லூரியிலும், ஏர்வாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி நித்யஸ்ரீக்கு நெல்லை அரசு மருத்துவ கல்லூரியிலும், நெல்லை கல்லணை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி கந்தலட்சுமி பேச்சியம்மாளுக்கு தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியிலும், கல்லணை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி சுகந்திக்கு நெல்லை மருத்துவ கல்லூரியிலும், கல்லணை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி சுப்புலட்சுமிக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியிலும்,

நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி புவனேஸ்வரிக்கு நெல்லை அரசு மருத்துவ கல்லூரியிலும், நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி சண்முகசுந்தரிக்கு திருவண்ணாமலை அன்னை மருத்துவ கல்லூரியிலும், மேலப்பாளையம் காயிதே மில்லத் நகர்மன்ற மேல்நிலைப்பள்ளி மாணவி முஜிதா பானுக்கு சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரியிலும், செட்டிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி வினிதாவுக்கு சென்னை மாதா மருத்துவ கல்லூரியிலும், பரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி சுவாதிகா ஆகாஷினிக்கு கோவை அரசு மருத்துவ கல்லூரியிலும், வெள்ளாங்குளி அரசு பள்ளி மாணவி திரிஷாவுக்கு விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரியிலும் மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ளது.

அரசு பள்ளிகளில் பயின்று மருத்துவ கல்லூரியில் சேர்ந்த மாணவிகளை நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்துக்கு அழைத்து பாராட்டினர். மாணவிகள் லாவண்யா, நித்யஸ்ரீ, கந்தலட்சுமி பேச்சியம்மாள், சுப்புலட்சுமி, சுகந்தி, முஜிதா பானு, புவனேஸ்வரி ஆகிய 7 பேருக்கும் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் பரிசு வழங்கி பாராட்டினார்.

துணை மேயர் கே.ஆர்.ராஜூ, முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த், முதன்மை கல்வி அலுவலர் திருப்பதி, நீட் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணசாமி, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் டைட்டஸ் ஜான் போஸ்கோ, தி.மு.க. மாநகர துணை செயலாளர் மூளிகுளம் பிரபு, மானூர் ஒன்றிய செயலாளர் அன்பழகன், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் இ.நடராஜன், இ.என்.மனோஜ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.


Next Story