மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி


மாணவ-மாணவிகளுக்கு   இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 28 Sept 2022 12:15 AM IST (Updated: 28 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

வெள்ளாளன்விளை பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

தூத்துக்குடி

உடன்குடி:

உடன்குடி அருகே வெள்ளாளன்விளை பிஷப் அசரியா பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்சிநடந்தது.

ஊடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் டி.பி.பாலசிங் தலைமை வகித்து 112 மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கி, தமிழக அரசு சார்பில் மாணவர்களுக்கு செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள், மாணவர்களின் நல்ஓழுக்கம் குறித்து பேசினார். பள்ளித் தாளாளர் ராஜேஷ், உடன்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் ஜான்சிராணி, வெள்ளாளன்விளை ஊராட்சி மன்றத் தலைவர் ராஜரத்தினம், கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலர் க.ஈளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். அகஸ்டா ஆரம்ப ஜெபம் செய்தார். மாணவி இந்துமதி வரவேற்றார். மாணவிகள் மகாலட்சுமி, வித்யாதேவி ஆகியோர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினர். பள்ளித் தலைமையாசிரியர் ஞானராஜ் நன்றி கூறினார்.


Next Story