திருமகன் ஈவெராவின் உடலுக்குஅமைச்சர், கலெக்டர், அரசியல் கட்சியினர் அஞ்சலி


திருமகன் ஈவெராவின் உடலுக்குஅமைச்சர், கலெக்டர், அரசியல் கட்சியினர் அஞ்சலி
x

திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ.வின் உடலுக்கு அமைச்சர் சு.முத்துசாமி, கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினார்கள்.

ஈரோடு

திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ.வின் உடலுக்கு அமைச்சர் சு.முத்துசாமி, கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினார்கள்.

எம்.எல்.ஏ. காலமானார்

ஈரோடு கிழக்கு தொகுதி திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. நேற்று ஈரோட்டில் காலமானார். அவரது உடலுக்கு தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர் திருமகன் ஈவெராவின் தந்தை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா, ஈரோடு ஆர்.டி.ஓ. சதீஸ்குமார், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி செந்தில்குமார், தாசில்தார் பாலசுப்பிரமணியம் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

மேயர், எம்.எல்.ஏ.

கோவை மண்டல ஐ.ஜி. சுதாகர், டி.ஐ.ஜி. முத்துசாமி, ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ் மற்றும் கவுன்சிலர்கள் வந்து அஞ்சலி செலுத்தினா்.

ஈரோடு அ.கணேசமூர்த்தி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மொடக்குறிச்சி சி.சரஸ்வதி, அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம், முன்னாள் மத்திய மந்திரி சுப்புலட்சுமி ஜெகதீசன், சேலம் மாநகராட்சி துணை மேயர் சாரதா தேவி ஆகியோரும் திருமகன் ஈவெராவின் உடலுக்கு மரியாதை செலுத்தினார்கள்.

தி.மு.க.- அ.தி.மு.க.

தி.மு.க. சார்பில் வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம், மாநகர செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட துணைச்செயலாளர்கள் அ.செந்தில்குமார், செல்லப்பொன்னி, நிர்வாகிகள் மணிராசு, பிரகாஷ், வி.சி.சந்திரகுமார், குறிஞ்சி சிவக்குமார், கா.பா.ஆறுமுகம் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ., கே.வி.ராமலிங்கம் மற்றும் மாநகராட்சி முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு, பெரியார்நகர் மனோகரன், சூரம்பட்டி ஜெகதீஸ் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினார்கள். பிறகு கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. பேட்டி அளித்தபோது, "திருமகன் ஈவெராவின் இழப்பு என்பது குடும்பத்தினருக்கும், கிழக்கு தொகுதி மக்களுக்கும் மட்டுமல்ல காங்கிரஸ் இயக்கத்துக்கே பேரிழப்பாகும். முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்", என்றார்.

காங்கிரஸ் கட்சி

காங்கிரஸ் கட்சி சார்பில் செல்வபெருந்தகை எம்.எல்.ஏ., கட்சியின் மாநில பொறுப்பாளர்கள் செல்ல குமார், மோகன்குமாரமங் கலம், கவுன்சிலர் ஈ.பி.ரவி, மாவட்ட தலைவர் மக்கள்ராஜன், மாவட்ட துணைத்தலைவர் ராஜேஷ்ராஜப்பா, நிர்வாகிகள் திருச்செல்வம், விஜயகண்ணா, விஜயபாஸ்கர், மாரியப்பன், பாஷா, முகமதுஅர்சத், குப்பண்ணா சந்துரு, ஈ.ஆர்.ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.எம்.பழனிசாமி, ஜாபர்சாதிக், செந்தூர் ராஜகோபால் உள்ளிட்டோரும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் விடியல் சேகர், செயற்குழு உறுப்பினர் சந்திரசேகர், இளைஞர் அணி மாநில தலைவர் யுவராஜா உள்ளிட்டோரும் திருமகன் ஈவெரா உடலுக்கு மரியாதை செலுத்தினார்கள்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி

விடுதலை சிறுத்தைகள் கட்சி ஈரோடு கிழக்கு மாவட்டம் சார்பில் கட்சியின் மாநில நிர்வாகி எஸ்.எம்.சாதிக் தலைமையில் மாவட்ட செயலாளர் சிறுத்தை வள்ளுவன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதில் மாநில துணைச்செயலாளர் ஆல்ட்ரின், மாவட்ட துணைச்செயலாளர்கள் பழனிசாமி, அக்பர் அலி, மாநகர செயலாளர் அம்ஜத்கான், மாவட்ட செய்தி தொடர்பாளர் பைசல் அகமது உள்பட பலர் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.

நந்தா கல்வி நிறுவனங்களின் தாளாளர் சண்முகன், திராவிடர் கழக மாநில அமைப்பு செயலாளர் சண்முகம், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நிர்வாகி லுக்மான் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள், அரசு உயர் அதிகாரிகள், மாநகராட்சி கவுன்சிலர்கள் உள்பட பொதுமக்கள் ஏராளமானோர் திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ.வின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.


Next Story