மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்கலெக்டர் அலுவலகத்தில் மனு


மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்கலெக்டர் அலுவலகத்தில் மனு
x

கலெக்டர் அலுவலகத்தில் மனு

ஈரோடு

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் வீட்டுமனை பட்டா கேட்டு ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேசிடம் நேற்று கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்ததாவது:-

மாற்றுத்திறனாளிகளான எங்களுக்கு வசிப்பதற்கு வீடுகள், நிலம் கிடையாது. கூலி வேலை செய்து வாழ்ந்து வருகிறோம். சிலர் குடும்பத்தினரின் வருமானத்தில் வசிக்கிறார்கள். வாழ்வாதாரமின்றி சிரமப்படுவதால் அரசின் சார்பில் விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். நிலம் உள்ளவர்களுக்கு வீடுகள் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்தனர். இதேபோல் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அதிகாரி ரங்கநாதன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி கோதைசெல்வி ஆகியோரிடமும் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.


Next Story