மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்
தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட பள்ளி கல்வி மற்றும் மாவட்ட மாற்றுத் திறனாளி நலத்துறை இணைந்து நடத்தும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் நேற்று நடந்தது. முகாமுக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். தொடர்ந்து முகாமில் மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கும், கை, கால் முடக்கினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடற்பயிற்சி சிகிச்சை அளிக்கப்படுவதையும் பார்வையிட்டார். முகாமில் ஓட்டப்பிடாரம் தாலுகா புளியமரத்து அரசடி பகுதியை சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவரின் 7 வயது மகன் சோகித்முவின் என்பவருக்கு ஆதார் அடையாள அட்டை வேண்டி மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர். உடனடியாக மாணவனுக்கு ஆதார் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர் உத்தரவிட்டார். இதனால் ஓட்டப்பிடாரம் தாலுகா ஆதார் மையத்தில் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் முதன்மை கல்விஅலுவலர் பாலதண்டாயுதபாணி, பிசியோதெரபி டாக்டர் ராஜேசுவரி மற்றும் டாக்டர்கள், அலுவலர்கள் பெற்றோர், மாணவர்கள் கலந்து கொண்டனர்.