முதன் முறையாக மதுரை ஐகோர்ட்டில் பெண் சோப்தார் நியமனம்


முதன் முறையாக மதுரை ஐகோர்ட்டில் பெண் சோப்தார் நியமனம்
x

முதன் முறையாக மதுரை ஐகோர்ட்டில் பெண் சோப்தார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

மதுரை


ஐகோர்ட்டு நீதிபதிகள் தங்களது அறையில் இருந்து கோர்ட்டு அறைக்குச் செல்லும்போது அவர்களுக்கு முன்பாக 'சோப்தார்' எனப்படும் உதவியாளர்கள் வெள்ளைநிற சீருடை மற்றும் சிவப்பு நிற தலைப்பாகை அணிந்து, மரியாதை நிமித்தமாகவும், நீதிபதிகளின் வருகையை உணர்த்தும் விதமாகவும் செங்கோலை ஏந்தியபடி சமிக்ஞை கொடுத்துக் கொண்டே செல்வார்கள். இந்த பதவிகளில் ஆண்கள் தான் இருந்து வந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை ஐகோர்ட்டில் முதல்முறையாக பெண் சோப்தார் நியமிக்கப்பட்டு, பணியாற்றி வருகிறார். சென்னை ஐகோர்ட்டில் இருந்து நீதிபதி மாலா, சுழற்சி முறையில் மதுரை ஐகோர்ட்டுக்கு வந்துள்ளார். அவருடைய சோப்தாரராக பெண் ஊழியர் லலிதா நியமிக்கப்பட்டு உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த பணி கிடைத்திருப்பது மகிழ்ச்சியை தருகிறது என்றார். மதுரை ஐகோர்ட்டில் சோப்தாரராக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டு இருப்பது இதுவே முதல் முறையாகும். இந்த நடவடிக்கை வரவேற்பையும் பெற்றுள்ளது.


Next Story