தமிழகத்தில் முதல் முறையாக நகர, மாநகர சபை கூட்டம்...!
தமிழகத்தில் முதல் முறையாக கிராமசபை கூட்டம் போல் நகரசபை, மாநகர சபை கூட்டம் நடைபெறும் என அறிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கிராம சபை கூட்டம் நடைபெறுவதைப் போன்று முதன்முறையாக நகர சபை மற்றும் மாநகர சபைக் கூட்டம் நடைபெற இருக்கிறது.
இதில் பல்லாவரம் அருகே உள்ள பம்மல் 6-வது வார்டு நவம்பர் 1-ம் தேதி நடைபெறும் மாநகர சபை கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுமக்கள் குறைகளை கேட்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒவ்வொருவார்டுக்கும் ஒன்பது உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் வார்டு கவுன்சிலர்கள் தலைவர்களாக இருந்து வருகிறார்கள். இந்தக் கூட்டத்தில் மக்கள் குறைகள் கேட்கப்படும்.
பொதுவாக கிராம சபை கூட்டங்களை பொறுத்தவரையில் அங்கு நடைபெற்ற வரக்கூடிய பணிகள் மற்றும் அடுத்ததாக நடைபெறவேண்டிய திட்டங்கள், மக்களுடைய கோரிக்கைகளை கேட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அரசினுடைய கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அந்த திட்டங்கள் நிறைவேற்றப்படும்.
அதன் அடிப்படையில்தான் நகர பகுதிகளில் இருக்கக்கூடிய மக்களுடைய குறைகளை கேட்டு அவர்களுடைய குறைகளை நிவர்த்தி செய்யக்கூடிய வகையில், கிராம சபை கூட்டம் போன்றே நகர சபை கூட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.