ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர சிகிச்சை மீட்பு மையம் திறப்பு


ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர சிகிச்சை மீட்பு மையம் திறப்பு
x
தினத்தந்தி 22 May 2023 12:30 AM IST (Updated: 22 May 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூரில் ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர சிகிச்சை மீட்பு மையத்தை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூரில் ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர சிகிச்சை மீட்பு மையத்தை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்.

அவசர சிகிச்சை மையம்

திருச்செந்தூர் பகத்சிங் பஸ்நிலையம் அருகில் ஆதரவற்றோர்களுக்கான மனநல காப்பக அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையத்தின் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது.

மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலை வகித்தார்.

கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு, அவசர சிகிச்சை மையத்தை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். பின்னர் காப்பகத்தை பார்வையிட்டார்.

கலந்து கொண்டவர்கள்

இந்த நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன், மாவட்ட சுகாதாரம் மற்றும் ஊரகப்பணிகள் துறை இணை இயக்குனர் கற்பகம், தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சிவக்குமார், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பொற்செல்வன், திருச்செந்தூர் உதவி கலெக்டர் புகாரி, தாசில்தார் வாமணன், திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரி தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் பொன்ரவி, நகராட்சி தலைவர் சிவஆனந்தி, துணைத்தலைவர் செங்குழி ரமேஷ், கவுன்சிலர்கள் செந்தில்குமார், தினேஷ்கிருஷ்ணா, தி.மு.க. நகர செயலாளர் வாள்சுடலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆர்-சோயா நிறுவனர் சரவணன் நன்றி கூறினார்.


Next Story