மோப்ப நாய் பிரிவை கவனிக்கும் போலீஸ்காரருக்கு, டி.ஐ.ஜி. முத்துச்சாமி பாராட்டு


மோப்ப நாய் பிரிவை கவனிக்கும் போலீஸ்காரருக்கு, டி.ஐ.ஜி. முத்துச்சாமி பாராட்டு
x
தினத்தந்தி 30 Dec 2022 12:15 AM IST (Updated: 30 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மோப்ப நாய் பிரிவை கவனிக்கும் போலீஸ்காரருக்கு, டி.ஐ.ஜி. முத்துச்சாமி பாராட்டு

நீலகிரி

ஊட்டி

ஊட்டியில் கடந்த 2000-ம் ஆண்டில் இருந்து மோப்பநாய் பிரிவு செயல்பட்டு வருகிறது. தற்போது வெற்றி, மதி, மில்டன் ஆகிய 3 நாய்கள் பணியாற்றி வந்தன. இதில் மில்டன், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டது. வெற்றி மற்றும் மதி ஆகிய 2 நாய்கள் தற்போது பணியில் உள்ளன. இந்த மோப்ப நாய்களுக்கு, மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த போலீஸ்காரர் பாண்டி என்பவர் சிறப்பாக பயிற்சி அளித்து கவனித்து வருகிறார். நீலகிரி மாவட்டத்தில் மோப்பநாய் பிரிவு தொடங்கப்பட்டது முதல் தற்போது வரை 100-க்கும் மேற்பட்ட வழக்குகளில் மோப்ப நாய்கள் மூலம் துப்பு துலங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று கோவை சரக டி.ஐ.ஜி. முத்துச்சாமி, நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வந்தார். அப்போது மோப்பநாய் பிரிவை நேரடியாக சென்று ஆய்வு செய்தார். பின்னர் மோப்ப நாய்களுக்கு நன்றாக பயிற்சி அளித்து பிரிவை சிறப்பாக கவனித்ததற்காக போலீஸ்காரர் பாண்டிக்கு வெகுமதி கொடுத்து பாராட்டினார். அப்போது அவருடன் போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மோகன் நவாஸ், துணை சூப்பிரண்டு மகேஸ்வரன் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story