கிராம உதவியாளர் பணிக்கான தேர்வை 6 ஆயிரம் பேர் எழுதினர்
தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணிக்கான தேர்வை 6 ஆயிரம் பேர் எழுதினர்.
தூத்துக்குடி உள்ளிட்ட 18 மையங்களில் கிராம உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வை 6 ஆயிரம் பேர் எழுதினர். விண்ணப்பித்த 1,929 பேர் தேர்வை எழுதவில்லை.
கிராம உதவியாளர் தேர்வு
தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலகில் காலியாக உள்ள 94 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு கடந்த 10.10.22 முதல் 07.11.22 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் தகுதியான 7 ஆயிரத்து 974 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. அவர்களுக்கான எழுத்து தேர்வு நேற்று மாவட்டம் முழுவதும் உள்ள 18 தேர்வு மையங்களில் நடந்தது. அதன்படி தூத்துக்குடி செயின்ட் மேரிஸ் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ஏ.பி.சி.வீரபாகு மெட்ரிகுலேஷன் பள்ளி, சுப்பையா வித்யாலயா பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ கே.ஜி.எஸ். மேல்நிலைப் பள்ளி, திருச்செந்தூா் வீரபாண்டியன்பட்டினம் ஆதித்தனாா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சாயர்புரம் போப்ஸ் கல்லூரி, சாத்தான்குளம் புலமாடன் செட்டியார் நேஷனல் மேல்நிலைப் பள்ளி, ஓட்டப்பிடாரம் புதியம்புத்தூர் ஜான் தி பாப்டிஸ்ட் மேல்நிலைப் பள்ளி, ஸ்ரீனிவாசா நகர் மகாத்மா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, எட்டயபுரம் குமாரகிரி சி.கே.டி.மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, கீழஈரால் டான்போஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கயத்தாறு அன்னைநகர் மதர் தெரசா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கோவில்பட்டி கே.ஆர்.நகர் நேஷனல் பொறியியல் கல்லூரி, கே.ஆா்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாத்திகுளம் மகாராஜபுரம் சீனி மெட்ரிகுலேஷன் பள்ளி, கே.ஆா்.நகர் கவியரசா் அண்ணாமலை ரெட்டியார் நினைவு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, வில்வமரத்துப்பட்டி ஷாரோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, நாகலாபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய 18 மையங்களில் நடந்தது.
6,029 பேர் எழுதினர்
இந்த தேர்வில் மொத்தம் 1929 பேர் கலந்து கொள்ளவில்லை. இதனால் மொத்தம் 6 ஆயிரத்து 29 பேர் மட்டும் தேர்வு எழுதினர். தேர்வை கண்காணிக்க 10 மேற்பார்வை அலுவலர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் தேர்வுமையங்களுக்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தேர்வை முன்னிட்டு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.