சவலாப்பேரி அரசு பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்
சவலாப்பேரி அரசு பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை சண்முகையா எம்.எல்.ஏ. வழங்கினார்.
தூத்துக்குடி
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள சவலாப்பேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நடந்தது. விழாவுக்கு எம்.சி.சண்முகையா எம்.எல்.ஏ தலைமை தாங்கி, மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கினார். நிகழ்ச்சியில் யூனியன் தலைவர்கள் ரமேஷ், கோமதிராஜேந்திரன், கருங்குளம் ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் சுரேஷ் காந்தி, ராமசாமி, மாவட்ட கவுன்சிலர் பாலசரஸ்வதி, பள்ளி தலைமை ஆசிரியை வினோலியா, புளியம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மர், பஞ்சாயத்து தலைவர்கள் சின்னத்துரை, அருண்குமார் உட்பட பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து குறுக்குச்சாலை, தருவைகுளம், செக்காரக்குடி, கீழபூவாணி ஆகிய அரசு மேல்நிலை பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை எம்.எல்.ஏ வழங்கினார்.
Related Tags :
Next Story