அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்குஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை


அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்குஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை
x
தினத்தந்தி 22 Feb 2023 12:15 AM IST (Updated: 22 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நாசரேத் அருகே அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

தூத்துக்குடி

நாசரேத்:

நாசரேத் அருகே உள்ள அகப்பைகுளம் பரி. அந்திரேயா ஆலயத்தில் தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல வாலிபர் ஐக்கிய சங்கம் சார்பில் 10,11 மற்றும் 12-ம் வகுப்பு அரசு தேர்வு எழுதும் மாணவ - மாணவிகளுக்கு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. சேகர குருவானவர் பாஸ்கரன் ஆரம்ப ஜெபம் செய்து தொடங்கி வைத்தார். பேராசிரியர்கள் ஸ்டான்லி, டாக்டர் வினிதா ஆகியோர் சிறப்பு தேவ செய்தி வழங்கினர். சங்க இயக்குனர் ஜேசன் தர்மராஜ் மாணவ - மாணவிகளுக்கு ஆலோசனைகள் மற்றும் சிறப்பு பிரார்த்தனை நடத்தினார். இதில் திரளான மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். ஆலய பரிபாலன கமிட்டி பொருளாளர் பொன்ராஜ் நன்றி கூறினார்.


Next Story