வாலிபருக்கு10 ஆண்டு சிறை
சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கூமாபட்டியை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 27). கூலித் தொழிலாளி. இவர் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்பழகனை கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த் விசாரித்து அன்பழகனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் நஷ்ட ஈடு வழங்க பரிந்துரை செய்தார்.
Related Tags :
Next Story