கடந்தவாரம் மனு கொடுத்த பெண்ணுக்குஇலவச வீட்டு மனைப்பட்டா: கலெக்டர் வழங்கினார்
தூத்துக்குடியில் கடந்தவாரம் மனு கொடுத்த பெண்ணுக்கு இலவச வீட்டு மனைப்பட்டாவை கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார்
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். நேற்று 480 பேர் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். மேலும் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி பிரிவில் பணியின் போது இறந்த தயாளன் என்பவரின் மனைவி மஞ்சு என்பவருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையையும், கடந்த வாரம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா கோரி மனு கொடுத்த கலியாவூரை சேர்ந்த பேபி என்பவருக்கு கலியாவூரில் இலவச வீட்டு மனைப்பட்டாவும் கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார். நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story