பாா்வையற்ற மாணவர்களுக்குரூ.3 லட்சத்தில் தொடு உணர்வு வாசிக்கும் திறன் கருவி:கலெக்டர் வழங்கினார்


பாா்வையற்ற மாணவர்களுக்குரூ.3 லட்சத்தில் தொடு உணர்வு வாசிக்கும் திறன் கருவி:கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 23 May 2023 12:15 AM IST (Updated: 23 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பார்வையற்ற மாணவர்களுக்கு ரூ.3 லட்சத்தில் தொடு உணர்வு வாசிக்கும் திறன் கருவிகளை தேனி கலெக்டர் வழங்கினார்.

தேனி



தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். இதில் 177 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. பின்னர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 3 பார்வையற்ற மாணவர்களுக்கு ரூ.3 லட்சம் மதிப்பிலான தொடு உணர்வு வாசிக்கும் திறன் கருவிகளை அவர் வழங்கினார்.

இந்நிலையில் கையில் மனு மற்றும் அட்டையில் சில வாசகங்கள் எழுதியபடி ஒருவர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தேனி அரசு பயிற்சி நிலைய பகுதியை சேர்ந்த முருகன் என்பது தெரியவந்தது. மேலும் தனது நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், அதனை மீட்டு தரக்கோரி பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் இதுவரை கொடுத்த மனுக்களுக்கு வழங்கப்பட்ட ரசீதுகளுடன் மனு கொடுக்க வந்ததாக அவர் கூறினார். பின்னர் அவர் கலெக்டரிடம் சென்று தனது கோரிக்கை குறித்து மனு கொடு்த்தார்.

மாணிக்காபுரத்தை சேர்ந்த மகளிர் சுய உதவி குழுவினர் கொடுத்த மனுவில், தங்களது ஊரில் இருந்து பஸ் நிறுத்தம், மயானத்திற்கு செல்லும் சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கூறியிருந்தனர். இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் மதுமதி, மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலர் காமாட்சி, தனித்துறை ஆட்சியர் சாந்தி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story