மேற்கு வங்காளத்திற்கு 104 பன்றிகள் அனுப்பி வைப்பு
நெல்லையில் இருந்து ெரயில் மூலம் மேற்கு வங்காளத்திற்கு 104 பன்றிகள் அனுப்பி வைக்கப்பட்டது.
திருநெல்வேலி
ரெயில்கள் மூலம் பல்வேறு இடங்களுக்கு கட்டணங்கள் அடிப்படையில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. அதன்படி நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து பல்வேறு இடங்களுக்கு ரெயில் மூலம் இந்த கால்நடைகள் கொண்டு செல்லப்படுகின்றன. அந்த வகையில் நேற்று மாலை நெல்லையில் இருந்து சென்னை செல்லும் அந்தியோதயா சிறப்பு ரெயிலில் 104 வளர்ப்பு பன்றிகள் மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள பீமாபூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தூத்துக்குடியை சேர்ந்த ஜெயச்சந்திரன் என்பவர் ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் கட்டணம் செலுத்தி இந்த பன்றிகளை தனிப்பெட்டி மூலம் நெல்லையில் இருந்து அனுப்பி வைத்தார். அவற்றுடன் அதனை பராமரிப்பதற்காக 3 பேர் செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story