பெண் தொழில்முனைவோர்களுக்குதிறன் மேம்பாட்டு பயிற்சி


பெண் தொழில்முனைவோர்களுக்குதிறன் மேம்பாட்டு பயிற்சி
x
தினத்தந்தி 6 Jan 2023 12:15 AM IST (Updated: 6 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

சின்னமனூர் அருகே காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் பெண் தொழில் முனைவோர்களுக்கான திறன்மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

தேனி

சின்னமனூர் அருகே காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் பெண் தொழில் முனைவோர்களுக்கான திறன்மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. வணிக ரீதியில் காய்கறி மற்றும் பழப்பொருட்களில் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு தொழில்நுட்பங்கள் குறித்த செயல் விளக்கத்துடன் கூடிய பயிற்சி வருகிற 11, 12-ந்தேதிகளில் நடக்கிறது. பயிற்சி பெறுபவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். மத்திய, மாநில அரசு திட்டங்கள், மானியங்கள் பற்றிய தகவல்கள் தெரிவிக்கப்பட்டு, வங்கிக்கடன் பெற்றுக் கொடுக்கவும் வழிவகை செய்யப்படும். பயிற்சி பெற விரும்பும் பெண் தொழில் முனைவோர்கள் தங்களின் பெயரை பதிவு செய்ய வேண்டும் என்று சென்டெக்ட் வேளாண் அறிவியல் மைய தலைவர் பச்சைமால் தெரிவித்துள்ளார்.


Related Tags :
Next Story