தபால் நிலையங்களில் பெண்களுக்கானசேமிப்பு திட்டம் அறிமுகம்


தபால் நிலையங்களில் பெண்களுக்கானசேமிப்பு திட்டம் அறிமுகம்
x
தினத்தந்தி 20 April 2023 12:15 AM IST (Updated: 20 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுைற கோட்ட தபால் நிலையங்களில் பெண்களுக்கான சேமிப்பு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக கோட்ட கண்காணிப்பாளர் ஆசிப் இக்பால் கூறினார்.

மயிலாடுதுறை

மயிலாடுதுைற கோட்ட தபால் நிலையங்களில் பெண்களுக்கான சேமிப்பு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக கோட்ட கண்காணிப்பாளர் ஆசிப் இக்பால் கூறினார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மகளிர் சேமிப்பு திட்டம்

மகளிர் மேன்மையை உறுதிப்படுத்தும் விதமாக புதிதாக 'மகளிர் மதிப்பு திட்டம்-2023' எனும் மகளிர் மேன்மை சேமிப்பு பத்திர திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தில் பெண்கள் இணைந்து பயன்பெறலாம்.

கடந்த நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டது போல பெண்களின் மேன்மையை உறுதிப்படுத்தும் விதமாக 'மகளிர் மதிப்பு திட்டம்' அமலுக்கு வந்துள்ளது. பெண்கள் மற்றும் சிறுமிகள் என அனைத்து மகளிரும் இத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

ரூ.2 லட்சம் வரை...

31.3.2025 வரை மட்டும் இந்த திட்டம் அமலில் இருக்கும். இந்த திட்டத்தில் சேர குறைந்தபட்ச தொகை ரூ.1,000 மட்டுமே. அதிகபட்ச தொகை ரூ.2 லட்சம் வரை செலுத்தலாம். ஒருவர் எத்தனை கணக்குகள் வேண்டுமானாலும் தொடங்கலாம். ஒரு கணக்கு மற்றும் அடுத்த கணக்குக்கான இடைவெளி 3 மாத காலமாகும்.

இத்திட்டத்தில் செலுத்தப்பட்ட முதலீட்டுக்கு காலாண்டுக்கு ஒருமுறை கூட்டுவட்டி 7.5 சதவீதம் அதே கணக்கில் சேர்க்கப்படும். இதன் முதிர்வு காலம் 2 ஆண்டுகள் மட்டுமே ஆகும்.

சிறப்பு மேளா

ஓராண்டுக்கு பிறகு இருப்புத்தொகையில் 40 சதவீதம் வரை எடுத்துக் கொள்ளலாம். கணக்கு தொடங்கி 6 மாதங்கள் கழித்து முன்முதிர்வு செய்தால் குறைக்கப்பட்ட வட்டி விகிதம் 5.5 சதவீதம் முதலீட்டு தொகையுடன் கிடைக்கும்.

தற்போது, மயிலாடுதுறை கோட்டத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் மகளிர் மேன்மை சேமிப்பு திட்டத்துக்கான சிறப்பு மேளா நடைபெறுகிறது. இந்த திட்டத்தில் அனைத்து பெண்கள் மற்றும் சிறுமிகள் புதிய சேமிப்பு கணக்கை தங்களுக்கு அருகில் உள்ள தபால் நிலையங்களில் தொடங்கி பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story