கஞ்சா கடத்தியவரின் வீடு பறிமுதல்


கஞ்சா கடத்தியவரின் வீடு பறிமுதல்
x
தினத்தந்தி 10 Oct 2022 12:15 AM IST (Updated: 10 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கஞ்சா கடத்தியவரின் ரூ.51 லட்சம் மதிப்புள்ள வீடு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம்

கஞ்சா கடத்தியவரின் ரூ.51 லட்சம் மதிப்புள்ள வீடு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தெரிவித்துள்ளார்.

குண்டர் சட்டம்

ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை கூறியதாவது:-

மாவட்டத்தில், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை குறித்து நடந்த சோதனையில் இந்த ஆண்டு இதுவரை 76 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 127 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து ரூ.30 லட்சம் மதிப்பிலான 246 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. 159 கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் விற்பனை செய்யும் நபர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு, அதில் 143 நபர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 107 பேரிடம் இருந்து நன்னடத்தை பிணையப்பத்திரம் பெறப்பட்டுள்ளது. அதே குற்றத்தை மீண்டும் செய்த தொண்டி சைபுநிஷா மீதம் உள்ள நன்னடத்தை காலம் முடியும் வரை வெளியில் வரமுடியாதவாறு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கஞ்சா விற்பனை மற்றும் கடத்தியவர்களில் 6 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

வீடு பறிமுதல்

கஞ்சா வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளவர்களின் வங்கி கணக்குகள் மற்றும் குடும்பத்தினரின் வங்கி கணக்குகள் என மொத்தம் 91 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. பரமக்குடியில் 90 கிலோ கஞ்சா கடத்திய கீழக்கரை நல்ல இப்ராகிம் என்பவரின் ரூ.51 லட்சம் மதிப்புள்ள வீடு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், போதை பொருள் விற்பவர்கள் குறித்து ஹலோ போலீஸ் எண்-83000 31100, மாவட்ட தனிப்பிரிவு 04567-290113 மற்றும் 04567-299761 ஆகிய தொலைபேசி எண்களுக்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்கள் பற்றிய விவரம் ரகசியமாக வைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story