கிருஷ்ணகிரியில் பத்திரப்பதிவு எழுத்தரிடம் ரூ.3 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை


கிருஷ்ணகிரியில்  பத்திரப்பதிவு எழுத்தரிடம் ரூ.3 லட்சம் மோசடி  சைபர் கிரைம் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 22 Sep 2022 6:45 PM GMT (Updated: 22 Sep 2022 6:46 PM GMT)

கிருஷ்ணகிரியில் பத்திரப்பதிவு எழுத்தரிடம் ரூ.3 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் பத்திரப்பதிவு எழுத்தரிடம் ரூ.3 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பத்திரப்பதிவு எழுத்தர்

கிருஷ்ணகிரி செந்தில் நகரை சேர்ந்தவர் சிவசங்கர் (வயது 43). பத்திரப்பதிவு எழுத்தராக உள்ளார். கடந்த 10-ந் தேதி இவர் இணையதளம் மூலம் பேப்பர் கம்பெனி முகவரியை கண்டுபிடித்தார்.

அதில் கொடுக்கப்பட்டிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு தனக்கு ஏ4 சீட் பேப்பர்கள் மொத்தமாக வேண்டும் என்றும், குறைந்த விலையில் வேண்டும் என்று கூறினார். இதையடுத்து எதிர்முனையில் பேசிய நபர், பேப்பர்கள் குறைந்த விலையில் தருவதாகவும், இதற்காக முன்பணம் தாங்கள் கூறும் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என்று கூறினார்.

ரூ.3 லட்சம் மோசடி

இதையடுத்து சிவசங்கர் அந்த நபர் கூறிய வங்கி கணக்கில் ரூ.3 லட்சத்து 2 ஆயிரத்து 240 தொகையை அனுப்பினார். அந்த தொகையை பெற்று கொண்ட நபர் தொடர்ந்து சிவசங்கரிடம் பேசுவதை தவிர்த்தார். மேலும் அந்த செல்போன் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது. இதன் பிறகு தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சிவசங்கர் இதுகுறித்து நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story