திருச்சி விமான நிலையத்தில் ரூ.8.23 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் ரூ.8.23 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி
திருச்சி விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணி அளவில் துபாய் செல்ல ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தயாராக நின்று கொண்டிருந்தது. இந்த நிலையில் விமானத்தில் செல்ல இருந்த பயணிகளை குடியுரிமை பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது தஞ்சாவூரை சேர்ந்த அகமது முஸ்தபா என்ற பயணியை சோதனை செய்ததில் அமெரிக்க டாலர்களை கடத்தி செல்ல இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து ரூ.8 லட்சத்து 23 ஆயிரம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story