திருச்சி விமான நிலையத்தில் ரூ.80 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்


திருச்சி விமான நிலையத்தில் ரூ.80 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்
x

திருச்சி விமான நிலையத்தில் ரூ.80 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி

செம்பட்டு:

வெளிநாட்டு பணம்

திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு பல்வேறு விமான நிலையங்கள் சார்பில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த விமானங்களில் அதிக அளவில் பயணிகள் வெளிநாடுகளுக்கு சென்று வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு செல்வதற்காக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் திருச்சியில் இருந்து துபாய்க்கு வெளிநாட்டு பணம் கடத்த இருப்பதாக மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

பறிமுதல்

இதைத்தொடர்ந்து அவர்கள் அந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளை சோதனை செய்தனர். அப்போது மதுரையை சேர்ந்த பயணி ஒருவர் தனது உடைமையில் மறைத்து வைத்து ரூ.80 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணத்தை துபாய்க்கு கொண்டு செல்ல இருந்ததை கண்டுபிடித்தனர்.

இதைத்தொடர்ந்து பணத்தை பறிமுதல் செய்த மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள், அவரை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் திருச்சி விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story