தடிக்காரன்கோணம் அருேக காட்டுத்தீயை அணைக்கும் பணி தீவிரம்
தடிக்காரன்கோணம் அருேக காட்டுத்தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கன்னியாகுமரி
அழகியபாண்டியபுரம்:
தடிக்காரன்கோணம் அருேக உள்ள கீரிப்பாறை போலீஸ் நிலையம் முன்பு வனத்துறைக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த பகுதியில் உலர்ந்த இலைகள், காய்ந்த செடிகளில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீரென தீ பற்றியது. இந்த காட்டுத்தீ கடந்த 2 நாட்களாக அந்த பகுதி முழுவதும் பரவி ெகாண்டிருக்கிறது. இதுகுறித்து நாகர்கோவில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து தண்ணீைர பீய்ச்சி அடித்து காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
Related Tags :
Next Story