வெலிங்டன் பகுதியில் மோப்பநாயுடன் வனத்துறையினர் ஆய்வு


வெலிங்டன் பகுதியில் மோப்பநாயுடன் வனத்துறையினர் ஆய்வு
x

வெலிங்டன் பகுதியில் மோப்பநாயுடன் வனத்துறையினர் ஆய்வு செய்தனர்.

நீலகிரி

குன்னூர், ஜூன்.11-

குன்னூர் வெலிங்டன் ராணுவ பகுதியில் ஹாஸ்பிடல் சேரி உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த ஹாபி என்பவர் தனது பசுமாட்டை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது காட்டு பன்றியை வேட்டையாட வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு (அவுட்டுக்காய்) வெடித்து பசுமாடு காயம் அடைந்தது. இதையடுத்து அந்த பசுமாடு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது.

இதனைத்தொடர்ந்து போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர். இதில் பன்றியை வேட்டையாட வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்து பசுமாடு உயிரிழந்ததை உறுதி செய்தனர். இதையடுத்து கட்டபெட்டு வனத்துறையினர், நேற்று மோப்பநாய் காளியுடன் வெலிங்டன் பகுதியில் வேறு எங்காவது நாட்டு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்தனர்.


Next Story