வன தொழில் பழகுனர் தேர்வு


வன தொழில் பழகுனர் தேர்வு
x

நெல்லையில் வன தொழில் பழகுனர் தேர்வு நடந்தது.

திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் கடந்த 4-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை தமிழ்நாடு வன சார்நிலை பணிகளில் அடங்கிய வன தொழில் பழகுனர் தேர்வு நடந்தது. கடந்த 10-ந்தேதி நடைபெற இருந்த தேர்வு புயல் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அந்த தேர்வு நேற்று நெல்லை அருகே உள்ள பி.எஸ்.என். பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் நடந்தது. இந்த தேர்வை 38 பேர் எழுதினார்கள். இந்த தேர்வு மையத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் டாக்டர் பி.கிருஷ்ணகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



Next Story