நெல்விவசாய பணிகளில் விவசாயிகள் தீவிரம்


நெல்விவசாய பணிகளில் விவசாயிகள் தீவிரம்
x

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆண்டுதோறும் விவசாயிகள் பருவமழை சீசனை எதிர்பார்த்துதான் நெல் விதைப்பு விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராமநாதபுரம்

ஆர்.எஸ்.மங்கலம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆண்டுதோறும் விவசாயிகள் பருவமழை சீசனை எதிர்பார்த்துதான் நெல் விதைப்பு விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பருவமழை

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாத இறுதியில் வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்கியது. பருவமழை சீசன் தொடங்கிய நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம், சோழந்தூர், நாரணமங்கலம், ஆனந்தூர், காருகுடி உள்ளிட்ட பல ஊர்களிலும் விவசாயிகள் நெல் விதைப்பு பணிகளை தீவிரமாக தொடங்கினர்.

இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்கி ஒரு மாதம் கடந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக மழை அதிக அளவில் பெய்யவில்லை என்று கூறப்படுகிறது. மழை இல்லாததால் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள மங்கலம், சோழந்தூர், வடவயல், கழனிக்குடி உள்ளிட்ட பல கிராமங்களிலும் விவசாய நிலங்களில் நெல் பயிர்கள் வளர்வதற்கு கூட தண்ணீர் இல்லாமல் காய்ந்த நிலையில் காட்சி அளித்து வருகின்றன.

நடவு பணி

பருவமழை சீசன் முடிவடைய இன்னும் 2 மாத காலம் உள்ளதால் மழை பெய்யும் என்ற எதிர்பார்ப்பில் சோழந்தூர், ஆர்.எஸ்.மங்கலம் உள்ளிட்ட பல கிராமங்களிலும் விவசாயிகள் நெல் பயிர் நடவு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து விவசாயி முனியசாமி கூறியதாவது:-

கடந்த ஆண்டு பருவ மழை எதிர்பார்த்ததை விட அதிகமாக பெய்தது. இதனால் நெல் விளைச்சலும் எதிர்பார்த்ததைவிட நன்றாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு பருவமழை சீசன் தொடங்கி 1 மாதம் கடந்த நிலையில் நெல் பயிர்கள் வளர்வதற்கு தேவையான மழை இதுவரை பெய்யவில்லை.

மழைபெய்யும்

இதனால் நெல் பயிர்கள் வளர்வதற்கு கூட தண்ணீர் இல்லாமல் பயிர்கள் காய்ந்த நிலையிலேயே காட்சிஅளித்து வருகின்றன. மழையை எதிர்பார்த்து தான் நெல் பயிர்களை நடவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்.

இந்த ஆண்டு மழை பெய்தால் மட்டுமே நெல் விவசாயம் நன்றாக இருக்கும். வருண பகவான் கருணை காட்டி மழைபெய்யும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story