முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிறந்தநாள் விழா
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிறந்த நாள் விழாவையொட்டி கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
சிவகங்கை
இளையான்குடி,
முன்னாள் முதல்-அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவருமான ஓ.பன்னீர்செல்வத்தின் 72-வது பிறந்த நாளையொட்டி இளையான்குடி தெற்கு ஒன்றியம் சார்பில் இளையான்குடி அருகே வாணி கிராமத்தில் உள்ள கருமலையான் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து மானாமதுரை இளையான்குடி சாலையில் உள்ள ஹோலி கிராஸ் முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு இளையான்குடி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் டாக்டர் கிருஷ்ண பிரபு தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி செயலாளர் கே.ஆர்.எம் சுந்தரபாண்டியன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் கார்த்திகைச்சாமி, ஜெயலலிதா பேரவை செயலாளர் ராஜ்குமார், முனைவென்றி துரைசிங்கம் அழகேசன், விஷ்ணுகாந்த், வழக்காணி மோகன் மற்றும் கழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story