விவசாயி விஷம் குடித்து தற்கொலை
போடி அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
போடி அருகே கீழசொக்கநாதபுரம் நேதாஜி கிழக்கு தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 48). விவசாயி. இவர் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனை அவரது மனைவி கண்டித்து வந்தார். இந்தநிலையில் கடந்த 15-ந் தேதி இரவும் வழக்கம்போல் ராமகிருஷ்ணன் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது அவரது மனைவி மீண்டும் கண்டித்தார். இதில், விரக்தியடைந்த ராமகிருஷ்ணன் விஷத்தை குடித்தார்.
அப்போது மயங்கி விழுந்த அவரை, குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராம கிருஷ்ணன் இறந்தார். இதுகுறித்து போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.