வேடசந்தூர் அருகே லாரி மோதி விவசாயி பலி


வேடசந்தூர் அருகே லாரி மோதி விவசாயி பலி
x

வேடசந்தூர் அருகே லாரி மோதி விவசாயி பலியானார்.

திண்டுக்கல்

வேடசந்தூர் அருகே உள்ள ஒத்தக்கடை இந்திராநகரை சேர்ந்தவர் தாந்தோன்றிபெருமாள் (வயது 72). விவசாயி. இன்று மாலை இவர், எரியோடு நோக்கி சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

வேடசந்தூர் அருகே கரூர்-திண்டுக்கல் சாலையில் ஒத்தக்கடை பகுதியில் வந்தபோது, திண்டுக்கல்லில் இருந்து கரூர் நோக்கி சென்ற டிப்பர் லாரி சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே தாந்தோன்றிபெருமாள் பரிதாபமாக இறந்தார். இது குறித்து எரியோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story