பல்லடம் பகுதியில் தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததால் தக்காளி செடியை விளை நிலங்களில் விவசாயிகள் டிராக்டர் கொண்டு அழித்தனர்.

பல்லடம் பகுதியில் தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததால் தக்காளி செடியை விளை நிலங்களில் விவசாயிகள் டிராக்டர் கொண்டு அழித்தனர்.
x

பல்லடம் பகுதியில் தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததால் தக்காளி செடியை விளை நிலங்களில் விவசாயிகள் டிராக்டர் கொண்டு அழித்தனர்.

திருப்பூர்

பல்லடம்,

பல்லடம் பகுதியில் தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததால் தக்காளி செடியை விளை நிலங்களில் விவசாயிகள் டிராக்டர் கொண்டு அழித்தனர்.

தக்காளி சாகுபடி

பல்லடம், பொங்கலூர் பகுதிகளில் 1000 ஏக்கரில் தக்காளி பயிரிடப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தக்காளி விலை 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி ரூ.1000 வரை விற்பனையானதால், விவசாயிகள் அதிக அளவில் தக்காளி சாகுபடி மேற்கொண்டனர். கடந்த ஆகஸ்டு மாதத்தில் விதைக்கப்பட்ட தக்காளிகள் விளைந்து தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வெளி மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் தக்காளி வருகையால், தேவைக்கு அதிகமான உற்பத்தி ஏற்பட்டு தக்காளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

மேலும் பருவம் தவறி பெய்த மழையால் விளைந்த தக்காளிகள் அழுகி வீணாகி போனது. இதனால் தக்காளிகளை விளை நிலத்திலேயே டிராக்டர்கள் மூலம் தக்காளி செடிகளை அழித்து, அவற்றை உரமாக மாற்றி வருகின்றனர்.

இது குறித்து சித்தம்பலம் பகுதியை சேர்ந்த விவசாயி கோபால் கூறியதாவது:-

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தக்காளி நல்ல விலைக்கு விற்பனையானதால், பல்லடம், பொங்கலூர் பகுதி விவசாயிகள் அதிக அளவில் தக்காளி சாகுபடி செய்தோம். கடந்த ஆகஸ்டு மாதம் விதைத்த தக்காளிகள் விளைந்து தற்போது அறுவடை செய்யும் நிலையில், அதிக வரத்து காரணமாக தக்காளிக்கு உரிய விலை கிடைக்கவில்லை. மேலும் பருவம் தவறி பெய்த மழையால், தக்காளிகள் செடியிலேயே அழுகிவிட்டது. மேலும் விளைந்த தக்காளியை தரம் பார்த்து பிரித்தெடுக்க தொழிலாளர்களின் கூலி அதிகமாகிறது. இதனால் தக்காளியை அறுவடை செய்தும் பயன் இல்லாததால், தக்காளியை விளைந்த நிலத்திலேயே டிராக்டர் கொண்டு அழித்து உரமாக மாற்றி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story