முன்னாள் முதல் அமைச்சர் மு.கருணாநிதிக்கு 'பாரத ரத்னா' விருது வழங்க வேண்டும் - கவிஞர் வைரமுத்து


முன்னாள் முதல் அமைச்சர் மு.கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் - கவிஞர் வைரமுத்து
x

முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி கவிஞர் வைரமுத்து கவிதை நடையில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

சென்னை,

முன்னாள் முதல் அமைச்சர் மு.கருணாநிதியின் 99ஆவது பிறந்தநாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மு.கருணாநிதிக்கு கவிதை நடையில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

அதில் அவர், "அஞ்சுகத்தாயின் ஒரே மகன் ஆகையால் நீ ஒன்றானவன்" என்று துவங்கி, "உன்னை எண்ணங்களாலும் சிந்திக்கலாம் எண்களாலும் சிந்திக்கலாம்" என்று முடிவு பெறும் வகையில் கவிதை நடையில் அவரை புகழ்ந்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மேலும், மு.கருணாநிதிக்கு உயரிய விருதான "பாரத ரத்னா" விருது வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


Next Story