தர்மபுரி கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்-வருகிற 2-ந் தேதி நடக்கிறது


தர்மபுரி கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்-வருகிற 2-ந் தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 29 Nov 2022 12:15 AM IST (Updated: 29 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி உதவி கலெக்டர் (பொறுப்பு) ஜெயக்குமார் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தர்மபுரி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட தாலுகாக்களை சேர்ந்த விவசாயிகளின் குறைகளை தீர்ப்பதற்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தல்படி ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமை நடக்கிறது. இதன்படி வருகிற டிசம்பர் மாதம் 2-ந் தேதி (வெள்ளிக்கிழமை) பகல் 11 மணிக்கு தர்மபுரி உதவி கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் கோட்ட அளவிலான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்து கொள்கிறார்கள். இதில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் திரளாக கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்கள் குறைகள் மற்றும் கோரிக்கைகளை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story