விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன்நகை திருட்டு
விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன்நகை திருட்டு
பல்லடம்
பல்லடம் அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன்நகையை மர்ம ஆசாமிகள் திருடி சென்று விட்டனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவது:-
நகை திருட்டு
பல்லடம் அருகே உள்ள கே.கிருஷ்ணாபுரம் பிரிவு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரணி (வயது 58). விவசாயி. இவர் நேற்று வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தோடு வெளியே சென்றுள்ளார்.
பின்னர் திரும்பி வந்து பார்க்கும்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த சுப்பிரமணி வீட்டிற்குள் சென்று பீேராவை பார்த்தார். அப்போது அதில் வைத்திருந்த 14 பவுன்நகை மற்றும் பணத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்று இருப்பது தெரியந்தது. இது குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசில் சுப்பிரமணி புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவம் நடந்த வீட்டிற்கு வந்து விசாரித்தனர். மேலும் தடயஅறிவியல் நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர்.
போலீசார் விசாரணை
சுப்பிரமணி குடும்பத்துடன் வெளியே சென்று இருப்பதை அறிந்த ஆசாமிகள், அவருடைய வீட்டிற்கு வந்து கோடரியால் வீட்டு கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று திருடி சென்று இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.