பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சி அலுவலகம் முன்பு கவுன்சிலர் தர்ணா
குடிநீர் குழாயை மாற்றி தரக்கோரி பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சி அலுவலகம் முன்பு கவுன்சிலர் தர்ணாவில் ஈடுபட்டனர்.
கரூர்
பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சி 10-வது வார்டு பகுதியில் குடிநீர் குழாயை மாற்றி தரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த கவுன்சிலர் தேவி பேரூராட்சி நிர்வாக அதிகாரியிடம் கடந்த 40 நாட்களுக்கு முன்பு மனு ஒன்றை கொடுத்தார். ஆனால் இந்த மனு மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் அதிருப்தி அடைந்த அவர் தனது ஆதரவாளர்களுடன் பேரூராட்சி அலுவலகம் முன்பு நேற்று தர்ணாவில் ஈடுபட்டார். இதையடுத்து நிர்வாக அதிகாரி குமரவேலன், லாலாபேட்டை இன்ஸ்பெக்டர் ஜோதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதில் சமாதானம் அடைந்த அவர் அங்கிருந்து கலைந்து சென்றார். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story